Wednesday, April 22, 2009

தமிழருக்கெதிரான நம்பியாரின் வில்லத்தனம்

கீழ்க்கண்ட செய்தியை பாருங்கள். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஐ.நா-வின் இணை செயலாளரான விஜய் நம்பியார், இலங்கையிலுள்ள நிலையை விளக்க மறுத்துவிட்டாராம். இந்த மாதிரியான செயல்கள் பற்பல திரைமறைவிலே நடந்து இருக்கும் என இப்பொழுது தெளிவாக தெரிகின்றது. ஒரு ஒட்டு மொத்த இருட்டடிப்பு ஊடகங்களிலே செய்யப்படும் வேளையில், தமிழருக்கு எதிரான பிரச்சாரம் மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. http://thatstamil.oneindia.in/news/2009/04/22/world-nambiar-reluctant-to-brief-unsc-after-brief.html

சென்ற பதிவில், பதிவர் செல்வநாயகிக்கு பதிலளிக்கும் போது, மக்களின் ஓட்டே மாற்றத்தை கொண்டு வரும் என எழுதினேன். ஆனால் இப்போது, குறிப்பாக, நண்பர் சசியின் பதிவையும் அதனை ஒட்டி எழுந்த விவாதங்களும், ஓட்டு போடுவது என்பது ஒரு மைய அதிகாரத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை புரிந்து கொள்கின்றேன்.
http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

நான் என்னை பற்றி உணர்வது, தமிழ், தமிழன் என்று மட்டுமே. இந்த அடையாளப் போராட்டம் மனதில் ஒரு சுழலாக உருவாகி வந்து இருந்துள்ளது. நிச்சயம் சசி, சங்கரபாண்டி அவர்களின் பதிவு ஒரு பாதையை காட்டி உள்ளது. நன்றிகள்.

இந்த பதிவு எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் பலருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகின்றேன். அதே நேரத்தில், இந்தியாவை, இனிமேல் "இந்திய ஐக்கியம்" என்றே குறிப்பிடுவேன். மேலும், கற்பகம் அவர்களின் பதில், மிகவும் தெளிவாகவும், உயிரோட்டத்தோடும், அருமையாக தொகுக்கப் பட்டுள்ளது. அவருக்கு நன்றிகள்.
நியூயார்க்: இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, அவரது தம்பி கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

கொழும்பிலிருந்து இந்தியா சென்றபோது இந்திய அரசுத் தரப்பி்ல் விஜய் நம்பியாருக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொழும்பு வந்திருந்த விஜய் நம்பியார் வன்னிப் பகுதிக்கு வர வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் கோரிக்கை விடுத்திருந்தார். விஜய் நம்பியாரும் அந்தத் திட்டத்துடன்தான் இருந்தார். ஆனால் இலங்கை அரசு நம்பியாரை வன்னிக்கு செல்ல வேண்டாம் என தடுத்து விட்டதாம்.

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.

நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் தர முடியாது என்று மறுத்துள்ள விஜய் நம்பியாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


நன்றி: thatstamil.com

5 comments:

-/சுடலை மாடன்/- said...

On Sri Lanka, UN's Nambiar Resists Briefing the Council on His "Confidential" Trip: Is a USG Subpoena Needed?

Balaji-Paari said...

@சுடலை மாடன்,
இந்த சுட்டிக்கு நன்றிகள்

Anonymous said...

1. தமிழ் இன படுகொலையை எந்த நாடும் கண்டிக்கவில்லை
2. சக மனித இனம் என்று எந்த நாடும் உதவவில்லை
3. சக இந்து என்று எந்த இந்து இயகங்களும் உதவவில்லை
4. பாக்கிஸ்தானில் கோயில் இடித்தால் இந்து இரத்தம் கொதிக்கும் எந்த பார்பனர்க்கும் சிங்களவன் இடித்தால் கொதிக்கவில்லை
5. இந்துகளுக்கு ஆபத்து என்றால் வாய்சவடால் பேசும் பஜக கும்பலின் வாயில் இப்போது வாழைபழம்
6. சைவ பக்தர்கள் என்று ஒரு சைவ மடமும் வாய்திறக்கவில்லை
7. பாதிக்கபட்ட கிறிஸ்துவ மக்கள் மற்றும் ஆலயங்களுக்காக எந்த கிறிஸ்துவ நாடும் உதவவில்லை
8. திராவிட இனம் என்று எந்த சக திராவிட இனமும் கண்டுகொள்ளவில்லை
9. பிற நாட்டில் வாழும் தமிழர் அடிமய்களாய் கெஞ்ஞி கொண்டு

இதற்க்கு ஒரே வழி ; அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான், ஏன் என்றால் அவர்கள் தான் சக முஸ்லீம்களுக்கு பிற இனத்தவரால் பிரச்சனை என்றால் உலக அளவில் போராடி சாதிப்பது, பிற நாடுகளில் இருந்து சென்று போராடுவது.
ஒரு கார்டூன் பிரச்சனைகாக உலகளவில் போராடுவது.

எனவே அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.

Balaji-Paari said...

எந்தப் போராட்டமும் இன,மொழி மற்றும் இருப்பை முன் வைத்துதான் நிகழ வேண்டும். தவிர, மதங்கள் மற்றும், அவை தூண்டும் தேசியங்கள், அவை கட்டுப்படுத்தும் mass psycho-வை மீறி இருக்க வேண்டும்.

Anonymous said...

aiyikkiya naadugal sabai sweet bonda coffe kudikkum club pola therikiradhu.