தயவு செய்து உடனடியாக கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கும் எம்மவரின் விடிவுக்காக தன்னுயிரை மதியாது இத்தனை நாளாக உண்ணாவிரதமிருக்கும் தம்பி பரமேஸ்வரனுக்காகவும், எம் ஈழத்தமிழினத்தைக் காக்க வழி வகை செய்யச் சொல்லியும் வேண்டுதல் விடுக்கும் மடலை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்புங்கள்.
தமிழினத்தைக் காப்பதற்காக விரதமிருக்கும் அந்த இளைஞனின் உயிர் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் உலகத்தின் குரூரபுத்தியை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் கடைசித் தடவையாக நாம் எமது சகோதரனுக்காகவும், எம்மினத்துக்காகவும் இந்த மடலை அனுப்பி வைப்போம்.
இருபத்தி இரண்டு நாளாக உண்ணாவிரதமிருக்கும் எமது சகோதரன் பரமேஸ்வரனின் உயிர் துடிப்பு அடங்க இன்னும் சில மணித்துளிகளோ அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ என்று பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்திடம் அவனைக் காப்பாற்றித் தரும்படி இன்னொரு தடவை மன்றாடலாம்..வாருங்கள்!
அவரது 22 நாள் உண்ணாநிலையை அடுத்து அவர் கொடுத்துள்ள செவ்வி:

கீழ்க்கண்ட சுட்டிக்கு சென்று
Hon.Gordon Brown,
Prime Minister of United Kingdom,
United Kingdom.
அவர்களுக்கு செய்தி அனுப்புவோம்.
3 comments:
அவனவன் தன் சொந்த லாபத்துக்காக அரசியல் செய்கிறாங்கள்.
இதையெல்லாம் கவனிக்க அவனுக்கு எங்க நேரம் இருக்கபோகிறது.
பரமேஸ்வரன் உயிர் எந்த விதத்திலாவது காப்பாற்றப்பட்டால் மகிழ்ச்சி.
21ம் நூற்றாண்டில் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெறுமா?
காந்தியத்தை மதித்த வெள்ளையர்கள் இன்னமும் உயிரோடு இருக்கின்றார்களா?
இதனை அறிவதற்கு பரமேஸ்வரனின் உயிரைப் பணயம் வைப்பது சரியா? மற்றுமொரு திலீபன் தேவையா?
சற்றுமுன் கிடைத்த தகவல்.
http://www.indymedia.org.uk/en/2009/04/429000.html
Post a Comment