Sunday, February 20, 2011

தேசிய தலைவரின் தாய் பார்வதியம்மாள் மறைந்தார்

தமிழ் தேசிய தலைவரின் தாயாரின் மறைவுக்கு எனது அஞ்சலி. இன உணர்வுள்ள அனைவருக்கும் இது துக்கம் நிறைந்த தினம். இவரது மருத்துவத்திற்கு இடம் தராத மத்திய அரசின் நிர்பந்தம், மற்றும் மாநில அரசின் கையாலாகத் நிலையும் தமிழர்கள் மனதில் என்றும் மாறாத வடு.
தாய்-க்கு எனது அஞ்சலி.

இலங்கையில் வாழும் தமிழருக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் கீழ்க்கண்ட தளத்தை பார்வையிடவும்.
http://www.save-tamils.org/volunteer-enrollment.html

Monday, January 31, 2011

தமிழக மீனவர்களுக்காக..

இது தமிழக மீனவர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து முழங்க வேண்டிய நேரம். ஒரு பதிவு என்ன சாதிக்க போகின்றது என்று எண்ணாமல் ஒவ்வொருவரும்  தமது எதிர்ப்பை  இணையத்தின் முழக்கமாக  உருவம் கொள்ள செய்ய வேண்டிய தருணம். இப்போது இடும் பதிவென்ற விதைகள் லட்சிய உணர்வாக வளர்ந்து எழும்.
சமுதாயத்தில் மேல் பூச்சு போல் இருக்கும் கவரும் ஊடக நிரல்கள் இடையே பிளந்து வளரும் நம் எதிர்ப்பு.

காத்திரமாக உருவாகும் எதிர்ப்பை நீர்த்து போக செய்யும் மாநில அரசும், எதிரிக்கே ஆயுதங்கள் தந்து, தமிழர் தானே என்ற நினைப்பில், நாடக அரசியல் செய்யும் மத்திய அரசிற்கும் நமது எதிர்ப்புகளை பதிவு செய்வோம்.
1 . வரும் தேர்தல் களத்தில் சரியான பதிலடி கொடுப்போம்.
2 .வர்த்தக  நிறுவனங்களின் வளர்ப்பு பிள்ளைகளாய் ஆனா விளையாட்டு  ஊடகங்களிற்கு தமிழக மீனவர்களுக்காக கவன ஈர்ப்பு என்ற அடிப்படையில் "உலக கோப்பை கிரிகெட்   போட்டிகளை" நாம்  புறக்கணிக்க வேண்டும். 
3 . 500 மீனவர்களை நாம் இழந்துள்ளோம். இதன் தீர்வுகளாக தோன்றுபவைகளை விவாதத்திற்கு வைத்து, அதில் தெளிந்த உண்மைகளை நிறைவேற்ற அரசுகளிற்கு அழுத்தம் கொடுப்போம். இதற்கு எகிப்த்தையும், துனிசியா-வையும் முன்னுதாரனமாக கொள்வோம்.