Tuesday, April 22, 2014

இன்றைய பத்து நிமிடங்கள் -3


நயாகரா நீர் வீழ்ச்சியில் (அந்த ஊருக்கு பேரே அதுதான் ) உள்ள அருமையான பறவைக்காட்சி சாலை Bird Kingdom. இங்கு பல நாட்டு பறவைகளை காணலாம். மேலே உள்ளது வட ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது.  பெயர் Gouldian Finch. 
பறவைகளை இப்படி photo எடுத்து கொடுமை படுத்த கூடாது நண்பான்னு சில பேர் சொல்றது அசரீரியா காதுல விழுது. இன்னும் சிலர் கொஞ்சம் கிராப் பண்ணலாமேன்னு நினைக்கிறதும் கேட்குது. 
என்ன பண்றது ஆர்வக்கோளாறு. மன்னிச்சு விட்டுருங்க. 
இன்னும் வரும் நாட்களில் இந்த மாதிரியும் தொல்லை பண்ணுவேன். 

எ.ப. -3

பாலாஜி-பாரி 



Thursday, April 17, 2014

இன்றைய பத்து நிமிடங்கள் -2



இரண்டு வருடங்களுக்கு முன்னால் இங்க்கர்மென் என்ற இடத்தில காலை 6 மணியளவில் எடுத்த புகைப்படம். இந்த படத்தில் photo-chop ஏதும் இல்லை. 

காலைல போர்த்திட்டு தூங்காம இந்த மாதிரி வெட்டி வேலைய ஏண்டா செய்யறன்னு அப்பா கேப்பாருன்னு நினைக்கிறேன். 

நெய்தல் திணையில் இத்தகைய காட்சிகள் இதம். 

இந்த இடங்கள பற்றி சொல்லணும்னா, கோரை புற்களும், நீர்ப்ப்றவைகளும், சிறு புதர்களும் நிறைந்ததாக இருக்கும். 

சமயத்தில் blue berry பழங்களும்  கிடைக்கும். 

எ.பா. -2

பாலாஜி-பாரி 

Wednesday, April 16, 2014

இன்றைய பத்து நிமிடங்கள் -1

 
வளாகத்தில் தேர்வுகள் நடை பெறும் காலமிது. சில நாட்களாக நாய் பாதத்தை சுவற்றில் ஆங்காங்கே அம்புக்குறியுடன்  ஒட்டி சற்றே ஒய்வு எடுக்க விரும்பினால் தொடரவும் என்ற குறிப்புடன் மாணவர்களுக்கு அழைப்பு இருந்தது. 

அந்த அழைப்புக்கு அழையா பார்வையளானாக சென்றேன். ஒரு வகுப்பில் சில மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சற்றே நெருங்கி பார்க்கையில் உள்ளே இரண்டு நாய்களும் அதன் உரிமையாளர்களும் இருந்ததை அறிந்தென். 

அப்புறம் நிதானமாக அந்த நிகழ்வு குறித்து இருந்த சுவரொட்டியை படித்தேன். படிக்கிற புள்ளைக கொஞ்ச நேரம் நாய்களுடன் விளையாடி  ரிலாக்ஸ் பண்ண வளாகத்தின் மாணவ அமைப்பு செய்த ஏற்பாடு என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

இந்த சில வரிகளை எழுத 15 நிமிடம் ஆகியது. எ.ப -1

பாலாஜி-பாரி