Thursday, April 30, 2009

சுப்பிரமணியம் பரமேஸ்வரன்

அன்பான சகோதர சகோதரிகளே!
தயவு செய்து உடனடியாக கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கும் எம்மவரின் விடிவுக்காக தன்னுயிரை மதியாது இத்தனை நாளாக உண்ணாவிரதமிருக்கும் தம்பி பரமேஸ்வரனுக்காகவும், எம் ஈழத்தமிழினத்தைக் காக்க வழி வகை செய்யச் சொல்லியும் வேண்டுதல் விடுக்கும் மடலை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்புங்கள்.
தமிழினத்தைக் காப்பதற்காக விரதமிருக்கும் அந்த இளைஞனின் உயிர் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் உலகத்தின் குரூரபுத்தியை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் கடைசித் தடவையாக நாம் எமது சகோதரனுக்காகவும், எம்மினத்துக்காகவும் இந்த மடலை அனுப்பி வைப்போம்.
இருபத்தி இரண்டு நாளாக உண்ணாவிரதமிருக்கும் எமது சகோதரன் பரமேஸ்வரனின் உயிர் துடிப்பு அடங்க இன்னும் சில மணித்துளிகளோ அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ என்று பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்திடம் அவனைக் காப்பாற்றித் தரும்படி இன்னொரு தடவை மன்றாடலாம்..வாருங்கள்!



அவரது 22 நாள் உண்ணாநிலையை அடுத்து அவர் கொடுத்துள்ள செவ்வி:

Subramaniam Parameswaran





கீழ்க்கண்ட சுட்டிக்கு சென்று

Hon.Gordon Brown,

Prime Minister of United Kingdom,

United Kingdom.

அவர்களுக்கு செய்தி அனுப்புவோம்.

http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=33

Sunday, April 26, 2009

ஆரம்பிச்சுட்டாங்க தங்களோட ரௌடித்தனத்த காட்ட

நேத்து ஒரு செய்தி, தா. பாண்டியனோட தேர்தல் மனுவை நிறுத்தி வைச்சுட்டாங்களாம். இது எப்படி நடந்தது?. சரியா இவர் மனு தாக்கல் செஞ்ச சில நிமிட இடைவெளியில், முன்னாள் அதிமுக, இன்னாள் திமுக வக்கீலான ஜோதி, தேர்தல் அலுவுலரிடம் முறையிட்டு, தா.பா வின் விண்ணப்பத்தில் அவரது சொத்து விவரங்களில் பிழை உள்ளதாக கூறியிருக்கின்றார். அதனடிப்படையில், அரசு அலுவுலரான அந்த தேர்தல் அதிகாரி, தா.பா வின் விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன் மீதான முடிவு பின்பு அதாவது, திங்கள் அன்று தெரியும்.
http://thatstamil.oneindia.in/news/2009/04/25/tn-dpandians-nomination-withheld.html

எப்படிங்க கலைஞரே?, ம்ம்... உங்க வழியிலான ஆட்டத்த ஆரம்பிச்சுட்டீங்க. தா. பா., நிச்சயம் பாராளுமன்றம் போவாரு. ஆனா, உங்க முகத்துல கரிய பூச நீங்களே கரிய அரைச்சு கொடுத்துட்டீங்க...

சரி நீங்கதான் இப்படி ஆடறீங்கனா, உள்துறை அமைச்சரான் பனியா பிரதிநிதி, சிதம்பரம், தன்னோட பவர காட்டறாராம். காங்கிரசுக்கு எதிரா பிரச்சாரம் செய்யும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களின் குழுமத்தை சார்ந்த ஒரு 50 பேர கைது செஞ்சு இருக்கீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? காற்றை சிறைப் பிடிக்க முடியுமா? அல்லது, உங்க தலைவியோட ஆசி-யோட நடக்கின்ற போர, ஆதரிச்சு பேசறது முடியிலன்னு தெரிஞ்சு போய் குழம்பிப்போய் நீங்க அடியாள் கோதாவுல இறங்கிட்டீங்களா?. நல்லது தான். பூனைகள் எவ்வளவு நாள்தான் பைக்குள்ளேயே இருக்கும்.

இன்னும் 17 நாள்-ல போலீஸ், உளவுத்துறை, கையில இருக்கும் மீடியா, ன்னு பல வழிகள்-ல ஆடப்போறீங்க. நீங்க உங்க கைய உயர்த்தினா, மக்கள் "கை" இருக்குற இடம் தெரியாத மாதிரி ஓட்டுப் போடுவாங்க.

http://blog.tamilsasi.com/2009/04/software-professionals-arrested-in.html

Wednesday, April 22, 2009

தமிழருக்கெதிரான நம்பியாரின் வில்லத்தனம்

கீழ்க்கண்ட செய்தியை பாருங்கள். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஐ.நா-வின் இணை செயலாளரான விஜய் நம்பியார், இலங்கையிலுள்ள நிலையை விளக்க மறுத்துவிட்டாராம். இந்த மாதிரியான செயல்கள் பற்பல திரைமறைவிலே நடந்து இருக்கும் என இப்பொழுது தெளிவாக தெரிகின்றது. ஒரு ஒட்டு மொத்த இருட்டடிப்பு ஊடகங்களிலே செய்யப்படும் வேளையில், தமிழருக்கு எதிரான பிரச்சாரம் மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. http://thatstamil.oneindia.in/news/2009/04/22/world-nambiar-reluctant-to-brief-unsc-after-brief.html

சென்ற பதிவில், பதிவர் செல்வநாயகிக்கு பதிலளிக்கும் போது, மக்களின் ஓட்டே மாற்றத்தை கொண்டு வரும் என எழுதினேன். ஆனால் இப்போது, குறிப்பாக, நண்பர் சசியின் பதிவையும் அதனை ஒட்டி எழுந்த விவாதங்களும், ஓட்டு போடுவது என்பது ஒரு மைய அதிகாரத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை புரிந்து கொள்கின்றேன்.
http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

நான் என்னை பற்றி உணர்வது, தமிழ், தமிழன் என்று மட்டுமே. இந்த அடையாளப் போராட்டம் மனதில் ஒரு சுழலாக உருவாகி வந்து இருந்துள்ளது. நிச்சயம் சசி, சங்கரபாண்டி அவர்களின் பதிவு ஒரு பாதையை காட்டி உள்ளது. நன்றிகள்.

இந்த பதிவு எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் பலருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகின்றேன். அதே நேரத்தில், இந்தியாவை, இனிமேல் "இந்திய ஐக்கியம்" என்றே குறிப்பிடுவேன். மேலும், கற்பகம் அவர்களின் பதில், மிகவும் தெளிவாகவும், உயிரோட்டத்தோடும், அருமையாக தொகுக்கப் பட்டுள்ளது. அவருக்கு நன்றிகள்.




நியூயார்க்: இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, அவரது தம்பி கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

கொழும்பிலிருந்து இந்தியா சென்றபோது இந்திய அரசுத் தரப்பி்ல் விஜய் நம்பியாருக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொழும்பு வந்திருந்த விஜய் நம்பியார் வன்னிப் பகுதிக்கு வர வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் கோரிக்கை விடுத்திருந்தார். விஜய் நம்பியாரும் அந்தத் திட்டத்துடன்தான் இருந்தார். ஆனால் இலங்கை அரசு நம்பியாரை வன்னிக்கு செல்ல வேண்டாம் என தடுத்து விட்டதாம்.

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.

நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் தர முடியாது என்று மறுத்துள்ள விஜய் நம்பியாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


நன்றி: thatstamil.com

Monday, April 13, 2009

தமிழீழமும், இந்திய மக்களவைத் தேர்தலும்

சில வாரங்களாகவே இருந்து வரும் எரிச்சல், இந்த கட்டுரையை எழுதத் தூண்டுகின்றது.
எனக்கு கடந்த சில வாரங்களாக பத்தாண்டுகளுக்கும் மேலாக கலைஞர் மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து வந்தது. ஆனால் எப்போது திரு.பிராபாகரனை பற்றியும் அவரை நடத்த வேண்டிய முறை பற்றியும் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதை படித்தேனோ அப்போதிருந்து ஒரு வித அருவெறுப்பும், அய்யோ இவரையா தமிழினத்தலைவர் என்று நினைத்திருந்தேன் என்ற ஏமாற்றமும் மிஞ்சி நிற்கின்றது.

இந்த தமிழினத் துரோகி செய்த வரலாறு மன்னிக்காத குற்றங்கள் என எனக்கு படுவதை தொகுத்து மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டியதை கடமையாக நினைக்கின்றேன்.
வீரத்தியாகி திரு. முத்துக்குமார் அவர்களின், உச்சபட்ச தியாகத்தை அடுத்து தமிழகத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஒரு பேரலை உண்டானது. இந்த எழுச்சி, கட்சிகளுக்கு அப்பாலும் பரவி, பற்பல வடிவிலான போராட்டங்கள் மூலம் சிங்கள ஆதிக்கத்திற்கும், இராணுவ நடவடிக்கைக்கும் எதிர்ப்புகள் துணிச்சலாக வெளிவந்த வண்ணம் இருந்தது. இதில் "விகடன்" போன்ற பத்திரிக்கைகளும், பங்கு பெற்ற வண்ணம் இருந்தது வியப்பான உண்மையாகும். (வியாபாரத்திற்காக என்று கூறி புறந்தள்ளினாலும், அவர்களது பதிப்புகள் ஈழத்தமிழர்களின் நலனுக்கு நிச்சயம் எதிரானதாக இருக்கவில்லை).

தமிழினத் தலைவராக தன்னை நினைத்திருந்தால், இந்த எழுச்சியை தனது உணர்ச்சியின் ஒத்ததிர்வாக பார்த்திருக்க வேண்டும். இந்த தருணத்தில்தான் மாகாணங்களின் ஐக்கியமாகிய இந்திய மக்களவைத் தேர்தலும் வருகின்றது. இந்த இடத்தில், தனது குடும்ப நலனை மட்டும் முன்னிறுத்தி, ஈழப்போராட்டத்திற்கு எப்போதுமே எதிர்ப்பு நிலை எடுக்கும் காங்கிரஸ் கட்சியிடம் தேர்தல் உடன்படிக்கை செய்து கொண்டது, என்னை போன்ற சாமனியனுக்கு மிக மோசமான வெறுப்பை உண்டாக்கியது. குறிப்பாக, இந்திய இராணுவத்தின் சிங்களர்களுக்கான உதவியும், மற்ற தொழில்நுட்ப உதவியும் காங்கிரஸ் அல்லாத எந்த அரசும் செய்திருக்காது என்றே நினக்கின்றேன்.

இதற்கும் மேலாக, கலைஞரின் இராஜ தந்திரம், அதாவது நயவஞ்சகம், ஈழத்தமிழர்களுக்கு எதிராக திரண்டு இருக்கும் அணியை பிரிப்பதில் தனது குயுக்தியை காட்டியதில் இருந்து தெளிவாக தெரிந்தது.


இந்த தன்மான தலைவர் செய்த அரும் பெரும்பணி என்னவென்றால், ஈழத் தமிழர்களுக்கான தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வை ஒரு தேர்தலை தீர்மானிக்கும் காரணியாவதிலிருந்து அப்புறப்படுத்தியது. இவரது தலைமையில் இருக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழீழருக்கு எந்த வித நன்மையும் இல்லை. ஜெயலலிதா அவர்களது தலைமையிலான கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்க போவதில்லை. அதிமுக விற்கு உழைக்கும் "தோழர்கள்" மறைமுகமாக பா.ஜ. க. ஆட்சி அமைக்கவே உதவ போகின்றார்கள்.இப்படி அவிழ்த்து கவிழ்த்த விட்ட நெல்லிக்காய் மூட்டையாக போய்விட்டது தமிழர்களின் உணர்வு. கலைஞரே, உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கின்றேன். தமிழர் எதையும் தாங்குவர், ஆனால் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தே தீருவர்.


இப்போது நினைக்கின்றேன். ஜெயலலிதா எனக்கு உவப்பான தலைவரல்ல. ஆனால் அவர் முதல்வராக இருந்திருந்தால், போராட்டம் நன்கு பழுத்து வெடித்திருக்கும். கலைஞர் ஆட்சி போல நீர்த்து போயிருக்காது. பாருங்கள் இப்போது கூட, வை.கோ.,அவர்கள் இரயில் நிலையம் சென்றதால்தான், (அதில் அவருக்கு ஏற்பட்ட அவமானம் எனக்கு வருத்தமே), முத்துக்குமார் பெயரில் மாணவர்களது இரயில் பயணப் பிரச்சாரம் ஊடகங்களில் அடிபடுகின்றது.


இங்கு ஒன்று சொல்ல தோன்றுவது, "அய்யா! எந்த ஒரு தனி நபரும், தமிழ் என்ற குடையை விட உயர்வாக இருக்க இயலாது".