Monday, July 18, 2016

பியூஷ் மனுஷ்

பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சுற்றுப்புற சூழல் தொடர்பான பணிகள் குறித்து நண்பர் தங்கமணி பல செய்திகளை தெரிவித்திருந்தார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் பியூஷ் மனுஷ் பற்றிய தகவல்கள் அறிய உதவும்.

https://www.facebook.com/thangamani.nithyanantham/posts/10206662997029353
https://www.facebook.com/hashtag/standwithpiyush
https://www.facebook.com/piyush.manush
நண்பர் தங்கமணியின் முகநூல் பக்கத்திலிருந்து அவரது மொழியில்......
நான் சேலம் ஜெயின் பவனில் நுழைந்த போது மாலை 4:00 மணி. பங்கேற்பாளர்களின் உரைகள், விவாதங்கள் எல்லாம் முடிந்து, முடிவான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றைச் செய்ய கூட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. மூத்த குற்றவியல் வழக்குறிஞர் பாப்பாமோகன் பேசுகையில் சுற்றுச்சூழல் போராளியும், மனித உரிமைப் போராட்டவாதியுமான பியூஸின் மீதான கொலைவெறித் தாக்குதல் மிக்க திட்டமிடப்பட்ட ஒன்று. மிகவும் முன்தயாரிப்புகளுடனேயே காவல்துறை அவரை வளைத்து, அரசு அதிகாரியை அவரது வேலையைச் செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிணையில் வரமுடியாதவாறு சிறைப்படுத்தி பின்னர் அவர் மீது இந்திய அரசியல் சட்டத்துக்கும், மனிதஉரிமைகளுக்கும், ஐநா மனித உரிமைபோராளிகளுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்புகளுக்கும் எதிராக (இந்த ஐநா ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது) அவர் மீது தனது வன்முறைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இது மேற்குறிப்பிட்ட அனைத்து வகை சட்ட முறைமைகளுக்கும் எதிரானது. எனவே வழக்குரைஞர்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்தாலும், பியூஸ் மானுஸ் வழக்கில் பார் கவுன்ஸிலில் தனியாக இதற்காக அனுமதி வாங்கி செவ்வாய் கிழமை (19/7/2016) வழகாடப்போவதாகச் சொன்னார். பியூஸின் சூழலியல், மனித உரிமை செயல்பாடுகள் அனைத்தையும் அறிய நேரும் எந்த நீதிபதியும் கொலைமிரட்டல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது பிணையை மறுக்கமாட்டார் என்று நம்புவதாக குறிப்பிட்டார். இதற்கு முன்பே பியுஸின் மீதான ஒரு கைது நடவடிக்கையின் போது வழக்கறிஞர் பாப்பாமோகன் அவருக்காக வாதாடியுள்ளதையும் குறிப்பிட்டார். வந்திருந்த மனித உரிமைபோராளிகள், சூழலியல் போராளிகள், செயல்பாட்டாளர்கள் இதனால் நம்பிக்கை அடைந்தனர். வந்திருந்தவர்களில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களை மட்டும் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சென்னை, திருப்பூர், திருச்சி, கோவை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர். முதல் நாள் முகப்புத்தகம் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தநாள் பலரும் பல பகுதியில் இருந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, பியூஸ் விரும்பியபடியே அனைவரும் மூக்கனேரி சென்று மரக்கன்றுகளை நட்டு அவரது விடுதலைக்கான செயல்பாடுகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு மூக்கனேரி சென்றோம். மூக்கனேரிக்கு சற்று முன்பாக திரண்ட மக்கள் கூட்டம் ஒரு ஊர்வலமாகத் திரண்டு மூக்கனேரியை அடைந்தது. அங்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவை நடப்பட்டன. அவ்வேளையில் மூக்கனேரியில் பல குழந்தைகள் அங்கு கட்டப்பட்டிருந்த சறுக்குகளில் விளையாடிக்கொண்டும் பல பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டவாறும் இருந்தனர். சேலம் நகரின் குப்பைகொட்டுமிடமாக மாறிப்போன ஒரு மீன்பிடி ஏரியாக இருந்த மூக்கனேரியை இப்படி மரக்கூட்டங்களுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட திட்டுகள் அடங்கிய பயன்தரு ஏரியாக மாற்றியது பியூஸ் பங்கேற்ற சேலம் மக்கள் குழுவின் சாதனைகளில் முக்கியமான ஒன்று. அங்கு மரக்கன்றுகளை நட்டு அவரது பிணைக்கான முயற்சியைத் தொடங்கியது நமது அரசு, அதிகாரம் இவைகளின் அவலமான, கோர முகத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது. வழக்கறிஞர் பாப்பா மோகன், கொளத்தூர் மணி அவர்கள் போன்றோருடன், பியூஸின் அப்பா, பியூஸின் மனைவி மற்றும் உறவினர்களும் நண்பர்களும் மரக்கன்றுகளை நட்டோம். பின் அங்கு அமைக்கப்பட்ட அரைவட்ட அரங்கில் மிகசிறிய ஒன்றுக்கூடலுக்கு பின் அனைவரும் பிரிந்து சென்றார்கள்.
***
பியூஸ் மானுஸை நான் சமீபத்தில் தான் முதன்முறையாகச் சந்தித்தேன். சரியாகச்சொன்னால் ஜூன் 4 ஆம் தேதி நாங்கள் அவரது தர்மபுரிக்கு அருகில் உள்ள கூட்டுறவு வனத்தில் அவரைச் சந்தித்தோம். நண்பர் சந்தோஷ் இதை ஒருங்கு செய்தார். அங்கு அப்போது இரண்டு லயோலா கல்லூரி பயிற்சி மாணவர்கள் இருந்தார்கள். மாணவர்கள் எங்களுக்கு அந்த வனத்தின் சில பகுதிகளைச் சுற்றிக்காட்டினார்கள். குறிப்பாக 1 இலட்சம் குழிகளுக்கு மேல் மலைப்பகுதி எங்கும் நீர்பிடிப்புப் குழிகளைத் தோண்டி மழைநீரை மலைப்பகுதிகளில் அறுவடை செய்யும் அவரது முயற்சியால் அங்கிருந்த ஓடையில் தூயநீர் ஓடிக்கொண்டிருந்தது. என் இளைமையில் பொது நீர்நிலைகளில் கட்டற்று நீராடி மகிழ்ந்தவன் நான். எனது கல்லூரிக்காலங்களில் கன்யாகுமரி கடலில் தனியனாக நள்ளிரவில் மணிக்கணக்காக திளைத்து இருக்குமளவுக்கு எனக்கு நீச்சலிலும் நீர்விளையாட்டிலும் வெறியே உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த நீர்நிலையிலும் அது காவேரி ஆனாலும் சரி கடலானாலும் சரி எங்கும் என்னால் மனத்தடையின்றி இறங்க முடிந்ததே இல்லை. எனக்கே வயதானதால் தான் இந்த தயக்கமோ என்ற எண்ணம் கூட ஏற்பட்டு விட்டது. ஆனால் பியூஸின் இந்த வனத்தில் இருந்த மீன் வளர்க்கும் குட்டை ஒன்றைப் பார்த்த மாத்திரத்தில் முன்போலவே நான் மாறிவிட்டேன். 15 அடி ஆழம் கொண்ட குட்டையில் மனத்தடையின்றி நீந்திக் களித்தேன். இதை என் 8 வயது மகனின் முன் செய்தேன். இதுதான் பியூஸ் எனக்கும் என் மகனுக்கும் அளித்த மிகுந்த அற்புதமான பரிசு. குளோரின் கலக்கப்பட்ட, டைல்கள் பதிக்கப்பட்ட, விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட குளங்களில் அவன் இனி நீராடலாம்; விளையாடலாம். ஆனால் ஒரு வனத்தின் மடியில் சுரந்த தூயநீரின் குளிர்ச்சியில், அருகில் ஒரு நன்னீர் நண்டோடு, தனது விளையாட்டுத்தோழியோடு தனது அன்புக்குரியவர்கள் உடனிருக்க அவன் செய்த சாகசங்கள் அவனுக்கு அளித்த மகிழ்ச்சியை அவன் மறக்கமாட்டான். அதுதான் இனி நீர்விளையாட்டிற்கான அவனது standard.

என் மகனும், சந்தோஷின் 6 வயது மகளும் ஆழமற்ற அந்த ஓடையில் நீராடிக்கொண்டிருந்தனர். பியூஸ் அவர்கள் அருகில் தண்ணீரில் அமைதியாக நீராடிக்கொண்டிருந்தார்.
நன்னீர். இந்த உலகத்தின் அரிய பொருட்க்களில் ஒன்றாக மாறிப்போனது கடந்த 15 ஆண்டுகளாகத்தான். அதற்குக் காரணம் நமது வளர்ச்சியைப் பற்றிய புரிதல்தான்.
இரவு உணவு அங்கு குத்தி சமைக்கப்பட்ட கம்பங்கூழ்தான். அப்பொழுது மிகச்சிறு பொழுதே அவரோடு பேசிக்கொண்டிருந்தோம். ஆர்கானிக் விவசாயம், இயற்கை வாழ்வியல் இவையெல்லாம் நன்னீர் இல்லாதபொழுது எப்படி சாத்தியம்? தண்ணீர் மாசுபடுவதைத் தடுப்பது எப்படி- மாசுபடுத்துவதை நிறுத்துதல் ஒன்றே வழி என்று அவர் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கல், ஒரு மரம், ஒரு ஆறு மட்டும் புனிதமல்ல எல்லாம் மலைகளும், எல்லா வனங்களும், எல்லா ஆறுகளும், கடல்களும், புனிதமானவை, நமது கண்மூடித்தனமான துய்ப்பில் இருந்து காப்பாற்றப்படவேண்டியவை என்று சொல்லிக்கொண்டுவந்தவர், கண்முடித்தனமான துய்ப்பு என்பது இன்றைய பிரச்சனை மட்டுமல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்னேயே மிகுபொருள் கொள்ளாமையை சமணம் தன் 10 ஒழுக்கங்களில் ஒன்றாகச் சொல்லியிருப்பதைக் குறிப்பிட்டார். இன்றிருக்கும் மக்கள் தொகையும் கருவிகளும் நமக்கு மேலதிகமான பொறுப்பும், கவனமும் இருக்கவேண்டுமென்பதைச் சொல்லுகின்றன என்று முடித்தார். அவர் அன்றிரவே அங்கிருந்து சேலத்துக்கு புறப்பட்டுவிட்டார். நாங்கள் அந்த இரவை அந்த வனத்தில் கழித்தோம். அடுத்த நாள் முக்கனேரியை சேர்ந்து பார்க்க அழைத்திருந்தார். அது வேறுகாரணங்களால் நடைபெறாமல் போனது. அதனால்தான் நான் மூக்கனேரியை இப்போது வந்து பார்த்தேன்; பலா மரக்கன்று ஒன்றை நட்டேன்.
நன்றி பியூஸ்.
இந்த நிகழ்வுகளுக்கு சம்பந்தமில்லாமல் அந்த ஏரியின் கரையில் ஒரு தந்தையும் மகளும் நின்றிருந்து நீர்வெளியைப் பார்த்திருந்தனர். பறவைகள் அவர்களது தலைக்குமேல் பறந்துகொண்டிருந்தன. அரசும் அதிகாரமும், கண்மூடித்தனமான முதலாளித்துவமும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள விழைவது அந்த ஏரியையும் நீரையும், பறவைகளையும் மட்டுமல்ல; அவர்களது அந்தப் பார்வையும் அது தரும் அந்த மகிழ்வையும் தான். அதற்குப்பதில் அவர்களது சட்டைப்பையில் இருந்து எடுத்துக்கொண்ட பணத்துக்கு அவர்கள் வழங்கவிரும்புவது அணுசக்தியால் தயாரிக்கப்பட்ட மின்சக்தியால் இயங்கும் செயற்கை நீரூற்றையும், வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட குளோரின் கலக்கப்பட்ட நீர்த்தாரையையும் தான்.
‪#‎Standwithpiyush‬

Tuesday, April 22, 2014

இன்றைய பத்து நிமிடங்கள் -3


நயாகரா நீர் வீழ்ச்சியில் (அந்த ஊருக்கு பேரே அதுதான் ) உள்ள அருமையான பறவைக்காட்சி சாலை Bird Kingdom. இங்கு பல நாட்டு பறவைகளை காணலாம். மேலே உள்ளது வட ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது.  பெயர் Gouldian Finch. 
பறவைகளை இப்படி photo எடுத்து கொடுமை படுத்த கூடாது நண்பான்னு சில பேர் சொல்றது அசரீரியா காதுல விழுது. இன்னும் சிலர் கொஞ்சம் கிராப் பண்ணலாமேன்னு நினைக்கிறதும் கேட்குது. 
என்ன பண்றது ஆர்வக்கோளாறு. மன்னிச்சு விட்டுருங்க. 
இன்னும் வரும் நாட்களில் இந்த மாதிரியும் தொல்லை பண்ணுவேன். 

எ.ப. -3

பாலாஜி-பாரி 



Thursday, April 17, 2014

இன்றைய பத்து நிமிடங்கள் -2



இரண்டு வருடங்களுக்கு முன்னால் இங்க்கர்மென் என்ற இடத்தில காலை 6 மணியளவில் எடுத்த புகைப்படம். இந்த படத்தில் photo-chop ஏதும் இல்லை. 

காலைல போர்த்திட்டு தூங்காம இந்த மாதிரி வெட்டி வேலைய ஏண்டா செய்யறன்னு அப்பா கேப்பாருன்னு நினைக்கிறேன். 

நெய்தல் திணையில் இத்தகைய காட்சிகள் இதம். 

இந்த இடங்கள பற்றி சொல்லணும்னா, கோரை புற்களும், நீர்ப்ப்றவைகளும், சிறு புதர்களும் நிறைந்ததாக இருக்கும். 

சமயத்தில் blue berry பழங்களும்  கிடைக்கும். 

எ.பா. -2

பாலாஜி-பாரி 

Wednesday, April 16, 2014

இன்றைய பத்து நிமிடங்கள் -1

 
வளாகத்தில் தேர்வுகள் நடை பெறும் காலமிது. சில நாட்களாக நாய் பாதத்தை சுவற்றில் ஆங்காங்கே அம்புக்குறியுடன்  ஒட்டி சற்றே ஒய்வு எடுக்க விரும்பினால் தொடரவும் என்ற குறிப்புடன் மாணவர்களுக்கு அழைப்பு இருந்தது. 

அந்த அழைப்புக்கு அழையா பார்வையளானாக சென்றேன். ஒரு வகுப்பில் சில மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சற்றே நெருங்கி பார்க்கையில் உள்ளே இரண்டு நாய்களும் அதன் உரிமையாளர்களும் இருந்ததை அறிந்தென். 

அப்புறம் நிதானமாக அந்த நிகழ்வு குறித்து இருந்த சுவரொட்டியை படித்தேன். படிக்கிற புள்ளைக கொஞ்ச நேரம் நாய்களுடன் விளையாடி  ரிலாக்ஸ் பண்ண வளாகத்தின் மாணவ அமைப்பு செய்த ஏற்பாடு என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

இந்த சில வரிகளை எழுத 15 நிமிடம் ஆகியது. எ.ப -1

பாலாஜி-பாரி 


Wednesday, January 01, 2014

நகர்வுகள்



தட தடவென பொழுதுகளை  நிறைக்கின்றன  நிகழ்வுகள். 
சடுதியாக விரைகின்றன  நாட்கள்.
கவலை என்பதை பற்றி கவலை கொள்ள முடியாமல்
உணர்வுகளை ஏமாற்றி திரியும் மனோநிலை.
ஏற்ற பாத்திரத்தை செவ்வனே செய்ய 
எம்பி குதிக்கின்ற  தொடர் முயற்சிகள்.
அவ்வப்போது நிலை கொள்ள உதவுகின்றது வானம்
மகளின் சிரிப்பைப் போல்.
மீண்டும் விடிகின்றது மற்றொரு காலை. 



-பாலாஜி பாரி 

Wednesday, March 20, 2013

ஐ. நா. மனித உரிமைக் கவுன்சில் (UNHRC): அமரிக்க தீர்மானமத்தின் நகல்



அமெரிக்காவின்  தீர்மானமும்  (08 மார்ச் 2013 )


 மற்றும் அதில் ஏற்ப்பட்ட திருத்தங்களும் (18 மார்ச் 2013) 


இவை  இரண்டும் திருந்தா படிவங்கள். இரண்டு ஆவணங்களுக்குள் இருக்கும் வித்தியாசம் மிகவும் நுட்பமானது. 

பாலாஜி பாரி 

Monday, September 17, 2012

Sunday, September 16, 2012

பறவைகள்-1

 பறவைகள்-1 
Black crowned –Night Heron, Shippagan, 13 May

Sunday, February 20, 2011

தேசிய தலைவரின் தாய் பார்வதியம்மாள் மறைந்தார்

தமிழ் தேசிய தலைவரின் தாயாரின் மறைவுக்கு எனது அஞ்சலி. இன உணர்வுள்ள அனைவருக்கும் இது துக்கம் நிறைந்த தினம். இவரது மருத்துவத்திற்கு இடம் தராத மத்திய அரசின் நிர்பந்தம், மற்றும் மாநில அரசின் கையாலாகத் நிலையும் தமிழர்கள் மனதில் என்றும் மாறாத வடு.
தாய்-க்கு எனது அஞ்சலி.

இலங்கையில் வாழும் தமிழருக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் கீழ்க்கண்ட தளத்தை பார்வையிடவும்.
http://www.save-tamils.org/volunteer-enrollment.html

Monday, January 31, 2011

தமிழக மீனவர்களுக்காக..

இது தமிழக மீனவர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து முழங்க வேண்டிய நேரம். ஒரு பதிவு என்ன சாதிக்க போகின்றது என்று எண்ணாமல் ஒவ்வொருவரும்  தமது எதிர்ப்பை  இணையத்தின் முழக்கமாக  உருவம் கொள்ள செய்ய வேண்டிய தருணம். இப்போது இடும் பதிவென்ற விதைகள் லட்சிய உணர்வாக வளர்ந்து எழும்.
சமுதாயத்தில் மேல் பூச்சு போல் இருக்கும் கவரும் ஊடக நிரல்கள் இடையே பிளந்து வளரும் நம் எதிர்ப்பு.

காத்திரமாக உருவாகும் எதிர்ப்பை நீர்த்து போக செய்யும் மாநில அரசும், எதிரிக்கே ஆயுதங்கள் தந்து, தமிழர் தானே என்ற நினைப்பில், நாடக அரசியல் செய்யும் மத்திய அரசிற்கும் நமது எதிர்ப்புகளை பதிவு செய்வோம்.
1 . வரும் தேர்தல் களத்தில் சரியான பதிலடி கொடுப்போம்.
2 .வர்த்தக  நிறுவனங்களின் வளர்ப்பு பிள்ளைகளாய் ஆனா விளையாட்டு  ஊடகங்களிற்கு தமிழக மீனவர்களுக்காக கவன ஈர்ப்பு என்ற அடிப்படையில் "உலக கோப்பை கிரிகெட்   போட்டிகளை" நாம்  புறக்கணிக்க வேண்டும். 
3 . 500 மீனவர்களை நாம் இழந்துள்ளோம். இதன் தீர்வுகளாக தோன்றுபவைகளை விவாதத்திற்கு வைத்து, அதில் தெளிந்த உண்மைகளை நிறைவேற்ற அரசுகளிற்கு அழுத்தம் கொடுப்போம். இதற்கு எகிப்த்தையும், துனிசியா-வையும் முன்னுதாரனமாக கொள்வோம்.



Thursday, October 21, 2010

இணைந்து வாழ்வது குறித்த சட்ட தீர்ப்பு

கீழே உள்ள சுட்டியில் இருப்பது இருவர் இணைந்து வாழ்வது குறித்த சட்ட தீர்ப்பு.


http://www.hindustantimes.com/SC-lays-down-maintenance-law-for-live-in-relationships/Article1-615791.aspx
எனக்கு , இத்தீர்ப்பினை குறித்து சில கருத்துக்கள் உள்ளது.

1 . மனைவி போல வாழ்வதும், உலகத்திற்கு முன் தம்பதியராய் வாழ்வதும், எப்படி வரையறை செய்வது?

இங்கு கனடாவில், வங்கிகணக்கு, அல்லது இருவரும் இணைந்து பதிவு செய்த சொத்துக்கள், இப்படி தீர்மானமான வழிகள் உள்ளது.

இதுபோல் இந்தியாவில் செய்வது எப்படி?



2 . உச்ச நீதிமன்ற தீர்ப்பு 'keep' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளது ஆச்சர்யத்தையும் எரிச்சலையும் தருகின்றது. மேலும், உடல் இன்பத்திற்கும், ஏவல் பணி மட்டுமே பணம் செலுத்தி பெற்றுகொண்டதால், (financially maintained), அத்தகைய பெண்கள் இனைந்து வாழ்ந்ததாக இருக்க முடியாது என்று கூறுவது அத்தகைய பெண்களை அவமதிப்பது போலாகும்.



இதை செய்திதளங்களில் படித்த பின் எனது புரிதலாக மட்டுமே இட்டுள்ளேன்.

Monday, July 19, 2010

பயணக் குறிப்புகள்-1

ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் ப்ளாக் எழுதலான்னு நினைச்சு ஆரம்பிக்கிறேன். இந்த ப்ளாக்-ல நாங்க/நான் பயணம் செய்த இடங்களை குறித்தான புகைப்படங்களையும் அது தொடர்பான சில வரிகளையும் எழுத எண்ணம். தொடர்ந்து எழுதணுமுன்னு விருப்பம். முயற்சி செய்கின்றேன்.

இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் "கேபோட் ட்ரெயில்" என்ற ஒரு மலை வழிப்பாதை யில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் முன்-panikkaalathil  ( fall ) எடுக்கப்பட்டவை. "கேபோட் ட்ரெயில்" கனடா-வின் கிழக்கு பகுதியில் அட்லாண்டிக் கடற்கரை ஒட்டி அமைந்துள்ளது. உலகின் மிக அழகான மலைதடம் என்று இந்த இடத்தை கூறுவார்கள். ஏறக்குறைய 300 கி.மீ நீளமான தடம். முந்தைய பதிவின் புகைப்படமும் இந்த பாதையின் ஒரு காட்சியே.

   





முன் பனிக்காலம் -அக்'2009


கேபாட் பாதை, நோவ ஸ்கோஷியா, கனடா.


Thursday, April 30, 2009

சுப்பிரமணியம் பரமேஸ்வரன்

அன்பான சகோதர சகோதரிகளே!
தயவு செய்து உடனடியாக கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கும் எம்மவரின் விடிவுக்காக தன்னுயிரை மதியாது இத்தனை நாளாக உண்ணாவிரதமிருக்கும் தம்பி பரமேஸ்வரனுக்காகவும், எம் ஈழத்தமிழினத்தைக் காக்க வழி வகை செய்யச் சொல்லியும் வேண்டுதல் விடுக்கும் மடலை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்புங்கள்.
தமிழினத்தைக் காப்பதற்காக விரதமிருக்கும் அந்த இளைஞனின் உயிர் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் உலகத்தின் குரூரபுத்தியை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் கடைசித் தடவையாக நாம் எமது சகோதரனுக்காகவும், எம்மினத்துக்காகவும் இந்த மடலை அனுப்பி வைப்போம்.
இருபத்தி இரண்டு நாளாக உண்ணாவிரதமிருக்கும் எமது சகோதரன் பரமேஸ்வரனின் உயிர் துடிப்பு அடங்க இன்னும் சில மணித்துளிகளோ அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ என்று பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்திடம் அவனைக் காப்பாற்றித் தரும்படி இன்னொரு தடவை மன்றாடலாம்..வாருங்கள்!



அவரது 22 நாள் உண்ணாநிலையை அடுத்து அவர் கொடுத்துள்ள செவ்வி:

Subramaniam Parameswaran





கீழ்க்கண்ட சுட்டிக்கு சென்று

Hon.Gordon Brown,

Prime Minister of United Kingdom,

United Kingdom.

அவர்களுக்கு செய்தி அனுப்புவோம்.

http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=33

Sunday, April 26, 2009

ஆரம்பிச்சுட்டாங்க தங்களோட ரௌடித்தனத்த காட்ட

நேத்து ஒரு செய்தி, தா. பாண்டியனோட தேர்தல் மனுவை நிறுத்தி வைச்சுட்டாங்களாம். இது எப்படி நடந்தது?. சரியா இவர் மனு தாக்கல் செஞ்ச சில நிமிட இடைவெளியில், முன்னாள் அதிமுக, இன்னாள் திமுக வக்கீலான ஜோதி, தேர்தல் அலுவுலரிடம் முறையிட்டு, தா.பா வின் விண்ணப்பத்தில் அவரது சொத்து விவரங்களில் பிழை உள்ளதாக கூறியிருக்கின்றார். அதனடிப்படையில், அரசு அலுவுலரான அந்த தேர்தல் அதிகாரி, தா.பா வின் விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன் மீதான முடிவு பின்பு அதாவது, திங்கள் அன்று தெரியும்.
http://thatstamil.oneindia.in/news/2009/04/25/tn-dpandians-nomination-withheld.html

எப்படிங்க கலைஞரே?, ம்ம்... உங்க வழியிலான ஆட்டத்த ஆரம்பிச்சுட்டீங்க. தா. பா., நிச்சயம் பாராளுமன்றம் போவாரு. ஆனா, உங்க முகத்துல கரிய பூச நீங்களே கரிய அரைச்சு கொடுத்துட்டீங்க...

சரி நீங்கதான் இப்படி ஆடறீங்கனா, உள்துறை அமைச்சரான் பனியா பிரதிநிதி, சிதம்பரம், தன்னோட பவர காட்டறாராம். காங்கிரசுக்கு எதிரா பிரச்சாரம் செய்யும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களின் குழுமத்தை சார்ந்த ஒரு 50 பேர கைது செஞ்சு இருக்கீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? காற்றை சிறைப் பிடிக்க முடியுமா? அல்லது, உங்க தலைவியோட ஆசி-யோட நடக்கின்ற போர, ஆதரிச்சு பேசறது முடியிலன்னு தெரிஞ்சு போய் குழம்பிப்போய் நீங்க அடியாள் கோதாவுல இறங்கிட்டீங்களா?. நல்லது தான். பூனைகள் எவ்வளவு நாள்தான் பைக்குள்ளேயே இருக்கும்.

இன்னும் 17 நாள்-ல போலீஸ், உளவுத்துறை, கையில இருக்கும் மீடியா, ன்னு பல வழிகள்-ல ஆடப்போறீங்க. நீங்க உங்க கைய உயர்த்தினா, மக்கள் "கை" இருக்குற இடம் தெரியாத மாதிரி ஓட்டுப் போடுவாங்க.

http://blog.tamilsasi.com/2009/04/software-professionals-arrested-in.html