
இலங்கை இராணுவம் போரின் வழியே தமிழர்களை அழிதொழிக்கும் செயலில் ஈடுபடுவது உள்ளங்கை நெல்லிக்கனி.இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாக இருப்பது:
அ. இந்தியா போர்நிறுத்தத்தை வலியுறுத்த காலம் தாழ்த்துவது.
ஆ. அமெரிக்க முதல்வராக திரு. ஒபாமா பதவியேற்க இன்னும் ஆறு நாட்கள் இருக்கின்றது.
இ. இந்த ஆறு நாட்களுக்குள் 100 கோடி பெருமானமுள்ள சீனாவின் ஆயுத பலத்தோடு போரை துரிதப்படுத்தும் இலங்கையின் செயற்பாடு.
ஈ. இலங்கையில் இருக்கும் பத்திரிக்கை சுதந்திரம்- பார்க்க: லோசனின் அண்மைய பதிவு.
இந்திய நடுவணரசு இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்த வேண்டி தமிழக தலைவர்களின் முயற்சிகள் நேற்றுவரை மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்துவந்திருக்கின்றது. இந்திய அரசிற்கு நெருக்கடி ஏற்படுத்த திரு. திருமாவளவன் அவர்கள் இன்று அறிவித்திருக்கும் "சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்" வெற்றி பெறவேண்டும், இந்தியா இலங்கைக்கு பிராந்திய ரீதியிலான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.திருமாவளவனின் இப்போராட்டம் தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. அவரது போரட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை பதிவு செய்கின்றேன்.
பிராந்திய தலைமையை கொண்டுள்ளதாக அறியப்படும் இந்திய நாடு, இந்த அழித்தொழிப்பை நிறுத்த இதுவரை ராஜாங்க ரீதியிலான நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் இந்தியா தனக்கு பாதகமான சூழலை உருவாக்கி கொண்டுவருகின்றது. பாகிஸ்தான் மற்றும் சீனா இலங்கைக்கு மேலும் மேலும் ஆயுதங்கள் வழங்கி வருவதால், எதிர்காலத்தில் இலங்கை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக இவ்விரண்டு நாடுகளுக்கும் சில பல உதவிகளை செய்ய நேரிடும்.
இவ்விரு நாடுகளுடன் தற்போது உள்ள எல்லை பிரச்சினையில் அடிப்படையில் பார்த்தால் இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு சாதகமானதல்ல.ஆனால் இந்தியா இலங்கைக்கு இராணுவ மற்றும் போரியல் ரீதியான உதவிகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த தருணத்தில் உலகத் தமிழர்களது சில முயற்சிகள்:
1. http://www.tamilsforobama.com/sign/letter.html
2.http://stop-the-vanni-genocide.blogspot.com/
சலன படம்: நன்றி youtube.com
1 comment:
எனது நண்பர் அனுப்பியிருந்த இரண்டு சுட்டிகள்:
http://www.thesundayleader.lk/20090104/editorial-.htm
http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm
Post a Comment