ஜாதி மல்லிகையின்
மணம் நிரப்பியது போல்
இசையால் நிறைந்திருந்தது
எனது அறை.
கரையில் இருந்த
ஆளற்ற தனி படகு
எண்ணங்களை மீட்டுகின்றது.
காற்று எழுதும் வரிகளாக
சிறு அலைகள்
வளைகுடா நீரின் மீது.
எழுதப்படாத கவிதையாக நீ
"கனவுகள் வேண்டாம்" என்கின்றாய்,
புன்முறுவல்களின் அதிர்வுள்ள குரலில்.
இருப்பின் மறுகரையை அடைய
என் படகை நான் அண்மித்த பொழுது
புத்தனும் ஆர்ப்பரிக்கின்றான்.
இப்பொழுதும் நிறைந்திருக்கின்றது
எனது அறை.
பாலாஜி-பாரி
1 comment:
இந்த கவிதையும் மிக அழகாக இருக்கின்றது பாரி அவர்களே.
Post a Comment