Friday, June 27, 2008

பேச நினைத்தது...

எல்லோருக்கும் போல எனக்கும் புத்தர் என்பவர் பள்ளி பாடங்கள் வழியாக அறிமுகமாகின்றார். மூணாவதோ இல்லை அஞ்சாவதோ படிக்கும் போது, புத்தர் மற்றும் எள் கதையை தமிழ் பாடத்தில் படித்தேன். அந்த கதை மிகவும் வித்தியாசமான கதையாக இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று பிற்காலத்தில் புரிந்தது. நமக்கு சொல்லப்படும் சாமி கதைகளில், இறந்தவர் உயிர் பெறுவதும், நோயுண்டவர் அடியவர்களின் அனுக்கிரகத்தால் குணம் பெறுவதுமான ஒரு நாடக பாணி கதையம்சங்கள் நிறைந்து, கதை என்றாலே, ஒரு இயல்பு மீறிய நிகழ்வின் வெளிப்பாடு என்று ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த புத்தர் எள் கதையில், ஒரு இயல்பான நிகழ்வை, ஏற்றுக்கொள்ள வைக்கும் மனப் பக்குவத்தை அளிக்கும் ஒரு நபராக புத்தர் என்னால் புரிந்து கொள்ளப்பட்டார்.
ஆனால் இன்று புத்தரை புரிந்து கொள்ள பல அரசியல் பரிமாணங்கள் தேவை படுகின்றது.
அதிலும் உடனடியாக கவன ஈர்ப்பு தேவைப்படும் செய்தியாக நான் நினைத்தது
செய்தி ஒன்று

பாலாஜி-பாரி

1 comment:

Thangamani said...

ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்!

புத்தர் என்பவர் ஒரு அதிகார எதிர்ப்பு அரசியலின் குறியீடாக புரிந்துகொள்ளப்படுவது வெகு நீண்ட பரம்பரியம் கொண்டது. அம்பேத்கர் அப்பாரம்பரியத்தின் சமீபத்திய சாட்சி. ஆனால் அதனாலேயே அப்பாரம்பரியத்தை குலைக்கும் வேலைகளும் நடப்பதுண்டு. அப்படித்தான் அணுவெடிப்பில் 'புத்தர் சிரித்தார்'.

இப்போது புத்தரின் முகமூடியில் தமிழ் ஒற்றுமையையை அசைக்க முடியுமா என்று அதிகார வர்க்கம் நினைக்கிறது.