Tuesday, June 02, 2015
Tuesday, April 22, 2014
இன்றைய பத்து நிமிடங்கள் -3
நயாகரா நீர் வீழ்ச்சியில் (அந்த ஊருக்கு பேரே அதுதான் ) உள்ள அருமையான பறவைக்காட்சி சாலை Bird Kingdom. இங்கு பல நாட்டு பறவைகளை காணலாம். மேலே உள்ளது வட ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது. பெயர் Gouldian Finch.
பறவைகளை இப்படி photo எடுத்து கொடுமை படுத்த கூடாது நண்பான்னு சில பேர் சொல்றது அசரீரியா காதுல விழுது. இன்னும் சிலர் கொஞ்சம் கிராப் பண்ணலாமேன்னு நினைக்கிறதும் கேட்குது.
என்ன பண்றது ஆர்வக்கோளாறு. மன்னிச்சு விட்டுருங்க.
இன்னும் வரும் நாட்களில் இந்த மாதிரியும் தொல்லை பண்ணுவேன்.
எ.ப. -3
பாலாஜி-பாரி
Thursday, April 17, 2014
இன்றைய பத்து நிமிடங்கள் -2
இரண்டு வருடங்களுக்கு முன்னால் இங்க்கர்மென் என்ற இடத்தில காலை 6 மணியளவில் எடுத்த புகைப்படம். இந்த படத்தில் photo-chop ஏதும் இல்லை.
காலைல போர்த்திட்டு தூங்காம இந்த மாதிரி வெட்டி வேலைய ஏண்டா செய்யறன்னு அப்பா கேப்பாருன்னு நினைக்கிறேன்.
நெய்தல் திணையில் இத்தகைய காட்சிகள் இதம்.
இந்த இடங்கள பற்றி சொல்லணும்னா, கோரை புற்களும், நீர்ப்ப்றவைகளும், சிறு புதர்களும் நிறைந்ததாக இருக்கும்.
சமயத்தில் blue berry பழங்களும் கிடைக்கும்.
எ.பா. -2
பாலாஜி-பாரி
Wednesday, April 16, 2014
இன்றைய பத்து நிமிடங்கள் -1
வளாகத்தில் தேர்வுகள் நடை பெறும் காலமிது. சில நாட்களாக நாய் பாதத்தை சுவற்றில் ஆங்காங்கே அம்புக்குறியுடன் ஒட்டி சற்றே ஒய்வு எடுக்க விரும்பினால் தொடரவும் என்ற குறிப்புடன் மாணவர்களுக்கு அழைப்பு இருந்தது.
அந்த அழைப்புக்கு அழையா பார்வையளானாக சென்றேன். ஒரு வகுப்பில் சில மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சற்றே நெருங்கி பார்க்கையில் உள்ளே இரண்டு நாய்களும் அதன் உரிமையாளர்களும் இருந்ததை அறிந்தென்.
அப்புறம் நிதானமாக அந்த நிகழ்வு குறித்து இருந்த சுவரொட்டியை படித்தேன். படிக்கிற புள்ளைக கொஞ்ச நேரம் நாய்களுடன் விளையாடி ரிலாக்ஸ் பண்ண வளாகத்தின் மாணவ அமைப்பு செய்த ஏற்பாடு என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
இந்த சில வரிகளை எழுத 15 நிமிடம் ஆகியது. எ.ப -1
பாலாஜி-பாரி
Wednesday, January 01, 2014
நகர்வுகள்
தட தடவென பொழுதுகளை நிறைக்கின்றன நிகழ்வுகள்.
சடுதியாக விரைகின்றன நாட்கள்.
கவலை என்பதை பற்றி கவலை கொள்ள முடியாமல்
உணர்வுகளை ஏமாற்றி திரியும் மனோநிலை.
ஏற்ற பாத்திரத்தை செவ்வனே செய்ய
எம்பி குதிக்கின்ற தொடர் முயற்சிகள்.
அவ்வப்போது நிலை கொள்ள உதவுகின்றது வானம்
மகளின் சிரிப்பைப் போல்.
மீண்டும் விடிகின்றது மற்றொரு காலை.
-பாலாஜி பாரி
Wednesday, March 20, 2013
ஐ. நா. மனித உரிமைக் கவுன்சில் (UNHRC): அமரிக்க தீர்மானமத்தின் நகல்
மற்றும் அதில் ஏற்ப்பட்ட திருத்தங்களும் (18 மார்ச் 2013)
இவை இரண்டும் திருந்தா படிவங்கள். இரண்டு ஆவணங்களுக்குள் இருக்கும் வித்தியாசம் மிகவும் நுட்பமானது.
பாலாஜி பாரி
Monday, September 17, 2012
Sunday, September 16, 2012
Sunday, February 20, 2011
தேசிய தலைவரின் தாய் பார்வதியம்மாள் மறைந்தார்
தமிழ் தேசிய தலைவரின் தாயாரின் மறைவுக்கு எனது அஞ்சலி. இன உணர்வுள்ள அனைவருக்கும் இது துக்கம் நிறைந்த தினம். இவரது மருத்துவத்திற்கு இடம் தராத மத்திய அரசின் நிர்பந்தம், மற்றும் மாநில அரசின் கையாலாகத் நிலையும் தமிழர்கள் மனதில் என்றும் மாறாத வடு.
தாய்-க்கு எனது அஞ்சலி.
இலங்கையில் வாழும் தமிழருக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் கீழ்க்கண்ட தளத்தை பார்வையிடவும்.
http://www.save-tamils.org/volunteer-enrollment.html

Monday, January 31, 2011
தமிழக மீனவர்களுக்காக..
இது தமிழக மீனவர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து முழங்க வேண்டிய நேரம். ஒரு பதிவு என்ன சாதிக்க போகின்றது என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் தமது எதிர்ப்பை இணையத்தின் முழக்கமாக உருவம் கொள்ள செய்ய வேண்டிய தருணம். இப்போது இடும் பதிவென்ற விதைகள் லட்சிய உணர்வாக வளர்ந்து எழும்.
சமுதாயத்தில் மேல் பூச்சு போல் இருக்கும் கவரும் ஊடக நிரல்கள் இடையே பிளந்து வளரும் நம் எதிர்ப்பு.
காத்திரமாக உருவாகும் எதிர்ப்பை நீர்த்து போக செய்யும் மாநில அரசும், எதிரிக்கே ஆயுதங்கள் தந்து, தமிழர் தானே என்ற நினைப்பில், நாடக அரசியல் செய்யும் மத்திய அரசிற்கும் நமது எதிர்ப்புகளை பதிவு செய்வோம்.
1 . வரும் தேர்தல் களத்தில் சரியான பதிலடி கொடுப்போம்.
2 .வர்த்தக நிறுவனங்களின் வளர்ப்பு பிள்ளைகளாய் ஆனா விளையாட்டு ஊடகங்களிற்கு தமிழக மீனவர்களுக்காக கவன ஈர்ப்பு என்ற அடிப்படையில் "உலக கோப்பை கிரிகெட் போட்டிகளை" நாம் புறக்கணிக்க வேண்டும்.
3 . 500 மீனவர்களை நாம் இழந்துள்ளோம். இதன் தீர்வுகளாக தோன்றுபவைகளை விவாதத்திற்கு வைத்து, அதில் தெளிந்த உண்மைகளை நிறைவேற்ற அரசுகளிற்கு அழுத்தம் கொடுப்போம். இதற்கு எகிப்த்தையும், துனிசியா-வையும் முன்னுதாரனமாக கொள்வோம்.

Thursday, October 21, 2010
இணைந்து வாழ்வது குறித்த சட்ட தீர்ப்பு
கீழே உள்ள சுட்டியில் இருப்பது இருவர் இணைந்து வாழ்வது குறித்த சட்ட தீர்ப்பு.
http://www.hindustantimes.com/SC-lays-down-maintenance-law-for-live-in-relationships/Article1-615791.aspx
எனக்கு , இத்தீர்ப்பினை குறித்து சில கருத்துக்கள் உள்ளது.
1 . மனைவி போல வாழ்வதும், உலகத்திற்கு முன் தம்பதியராய் வாழ்வதும், எப்படி வரையறை செய்வது?
இங்கு கனடாவில், வங்கிகணக்கு, அல்லது இருவரும் இணைந்து பதிவு செய்த சொத்துக்கள், இப்படி தீர்மானமான வழிகள் உள்ளது.
இதுபோல் இந்தியாவில் செய்வது எப்படி?
2 . உச்ச நீதிமன்ற தீர்ப்பு 'keep' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளது ஆச்சர்யத்தையும் எரிச்சலையும் தருகின்றது. மேலும், உடல் இன்பத்திற்கும், ஏவல் பணி மட்டுமே பணம் செலுத்தி பெற்றுகொண்டதால், (financially maintained), அத்தகைய பெண்கள் இனைந்து வாழ்ந்ததாக இருக்க முடியாது என்று கூறுவது அத்தகைய பெண்களை அவமதிப்பது போலாகும்.
இதை செய்திதளங்களில் படித்த பின் எனது புரிதலாக மட்டுமே இட்டுள்ளேன்.

Monday, July 19, 2010
பயணக் குறிப்புகள்-1
ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் ப்ளாக் எழுதலான்னு நினைச்சு ஆரம்பிக்கிறேன். இந்த ப்ளாக்-ல நாங்க/நான் பயணம் செய்த இடங்களை குறித்தான புகைப்படங்களையும் அது தொடர்பான சில வரிகளையும் எழுத எண்ணம். தொடர்ந்து எழுதணுமுன்னு விருப்பம். முயற்சி செய்கின்றேன்.
இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் "கேபோட் ட்ரெயில்" என்ற ஒரு மலை வழிப்பாதை யில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் முன்-panikkaalathil ( fall ) எடுக்கப்பட்டவை. "கேபோட் ட்ரெயில்" கனடா-வின் கிழக்கு பகுதியில் அட்லாண்டிக் கடற்கரை ஒட்டி அமைந்துள்ளது. உலகின் மிக அழகான மலைதடம் என்று இந்த இடத்தை கூறுவார்கள். ஏறக்குறைய 300 கி.மீ நீளமான தடம். முந்தைய பதிவின் புகைப்படமும் இந்த பாதையின் ஒரு காட்சியே.

Saturday, June 20, 2009
Thursday, April 30, 2009
சுப்பிரமணியம் பரமேஸ்வரன்
அன்பான சகோதர சகோதரிகளே!
தயவு செய்து உடனடியாக கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கும் எம்மவரின் விடிவுக்காக தன்னுயிரை மதியாது இத்தனை நாளாக உண்ணாவிரதமிருக்கும் தம்பி பரமேஸ்வரனுக்காகவும், எம் ஈழத்தமிழினத்தைக் காக்க வழி வகை செய்யச் சொல்லியும் வேண்டுதல் விடுக்கும் மடலை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்புங்கள்.
தமிழினத்தைக் காப்பதற்காக விரதமிருக்கும் அந்த இளைஞனின் உயிர் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் உலகத்தின் குரூரபுத்தியை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் கடைசித் தடவையாக நாம் எமது சகோதரனுக்காகவும், எம்மினத்துக்காகவும் இந்த மடலை அனுப்பி வைப்போம்.
இருபத்தி இரண்டு நாளாக உண்ணாவிரதமிருக்கும் எமது சகோதரன் பரமேஸ்வரனின் உயிர் துடிப்பு அடங்க இன்னும் சில மணித்துளிகளோ அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ என்று பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்திடம் அவனைக் காப்பாற்றித் தரும்படி இன்னொரு தடவை மன்றாடலாம்..வாருங்கள்!
அவரது 22 நாள் உண்ணாநிலையை அடுத்து அவர் கொடுத்துள்ள செவ்வி:

கீழ்க்கண்ட சுட்டிக்கு சென்று
Hon.Gordon Brown,
Prime Minister of United Kingdom,
United Kingdom.
அவர்களுக்கு செய்தி அனுப்புவோம்.
Sunday, April 26, 2009
ஆரம்பிச்சுட்டாங்க தங்களோட ரௌடித்தனத்த காட்ட
நேத்து ஒரு செய்தி, தா. பாண்டியனோட தேர்தல் மனுவை நிறுத்தி வைச்சுட்டாங்களாம். இது எப்படி நடந்தது?. சரியா இவர் மனு தாக்கல் செஞ்ச சில நிமிட இடைவெளியில், முன்னாள் அதிமுக, இன்னாள் திமுக வக்கீலான ஜோதி, தேர்தல் அலுவுலரிடம் முறையிட்டு, தா.பா வின் விண்ணப்பத்தில் அவரது சொத்து விவரங்களில் பிழை உள்ளதாக கூறியிருக்கின்றார். அதனடிப்படையில், அரசு அலுவுலரான அந்த தேர்தல் அதிகாரி, தா.பா வின் விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன் மீதான முடிவு பின்பு அதாவது, திங்கள் அன்று தெரியும்.
http://thatstamil.oneindia.in/news/2009/04/25/tn-dpandians-nomination-withheld.html
எப்படிங்க கலைஞரே?, ம்ம்... உங்க வழியிலான ஆட்டத்த ஆரம்பிச்சுட்டீங்க. தா. பா., நிச்சயம் பாராளுமன்றம் போவாரு. ஆனா, உங்க முகத்துல கரிய பூச நீங்களே கரிய அரைச்சு கொடுத்துட்டீங்க...
சரி நீங்கதான் இப்படி ஆடறீங்கனா, உள்துறை அமைச்சரான் பனியா பிரதிநிதி, சிதம்பரம், தன்னோட பவர காட்டறாராம். காங்கிரசுக்கு எதிரா பிரச்சாரம் செய்யும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களின் குழுமத்தை சார்ந்த ஒரு 50 பேர கைது செஞ்சு இருக்கீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? காற்றை சிறைப் பிடிக்க முடியுமா? அல்லது, உங்க தலைவியோட ஆசி-யோட நடக்கின்ற போர, ஆதரிச்சு பேசறது முடியிலன்னு தெரிஞ்சு போய் குழம்பிப்போய் நீங்க அடியாள் கோதாவுல இறங்கிட்டீங்களா?. நல்லது தான். பூனைகள் எவ்வளவு நாள்தான் பைக்குள்ளேயே இருக்கும்.
இன்னும் 17 நாள்-ல போலீஸ், உளவுத்துறை, கையில இருக்கும் மீடியா, ன்னு பல வழிகள்-ல ஆடப்போறீங்க. நீங்க உங்க கைய உயர்த்தினா, மக்கள் "கை" இருக்குற இடம் தெரியாத மாதிரி ஓட்டுப் போடுவாங்க.
http://blog.tamilsasi.com/2009/04/software-professionals-arrested-in.html

Wednesday, April 22, 2009
தமிழருக்கெதிரான நம்பியாரின் வில்லத்தனம்
கீழ்க்கண்ட செய்தியை பாருங்கள். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஐ.நா-வின் இணை செயலாளரான விஜய் நம்பியார், இலங்கையிலுள்ள நிலையை விளக்க மறுத்துவிட்டாராம். இந்த மாதிரியான செயல்கள் பற்பல திரைமறைவிலே நடந்து இருக்கும் என இப்பொழுது தெளிவாக தெரிகின்றது. ஒரு ஒட்டு மொத்த இருட்டடிப்பு ஊடகங்களிலே செய்யப்படும் வேளையில், தமிழருக்கு எதிரான பிரச்சாரம் மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. http://thatstamil.oneindia.in/news/2009/04/22/world-nambiar-reluctant-to-brief-unsc-after-brief.html
சென்ற பதிவில், பதிவர் செல்வநாயகிக்கு பதிலளிக்கும் போது, மக்களின் ஓட்டே மாற்றத்தை கொண்டு வரும் என எழுதினேன். ஆனால் இப்போது, குறிப்பாக, நண்பர் சசியின் பதிவையும் அதனை ஒட்டி எழுந்த விவாதங்களும், ஓட்டு போடுவது என்பது ஒரு மைய அதிகாரத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை புரிந்து கொள்கின்றேன்.
http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html
நான் என்னை பற்றி உணர்வது, தமிழ், தமிழன் என்று மட்டுமே. இந்த அடையாளப் போராட்டம் மனதில் ஒரு சுழலாக உருவாகி வந்து இருந்துள்ளது. நிச்சயம் சசி, சங்கரபாண்டி அவர்களின் பதிவு ஒரு பாதையை காட்டி உள்ளது. நன்றிகள்.
இந்த பதிவு எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் பலருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகின்றேன். அதே நேரத்தில், இந்தியாவை, இனிமேல் "இந்திய ஐக்கியம்" என்றே குறிப்பிடுவேன். மேலும், கற்பகம் அவர்களின் பதில், மிகவும் தெளிவாகவும், உயிரோட்டத்தோடும், அருமையாக தொகுக்கப் பட்டுள்ளது. அவருக்கு நன்றிகள்.
நியூயார்க்: இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.
இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, அவரது தம்பி கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.
கொழும்பிலிருந்து இந்தியா சென்றபோது இந்திய அரசுத் தரப்பி்ல் விஜய் நம்பியாருக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொழும்பு வந்திருந்த விஜய் நம்பியார் வன்னிப் பகுதிக்கு வர வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் கோரிக்கை விடுத்திருந்தார். விஜய் நம்பியாரும் அந்தத் திட்டத்துடன்தான் இருந்தார். ஆனால் இலங்கை அரசு நம்பியாரை வன்னிக்கு செல்ல வேண்டாம் என தடுத்து விட்டதாம்.
இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.
நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் தர முடியாது என்று மறுத்துள்ள விஜய் நம்பியாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நன்றி: thatstamil.com

Subscribe to:
Posts (Atom)